இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சிதான்! : அமித்ஷா
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் நாட்டில் தொடரும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ‘5 - 10 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்ய நாம் அதிகாரத்திற்கு வரவில்லை. இன்னும் 40 - 50 வருடங்களுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சிதான். நமக்கிருக்கும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் பல மிகப்பெரிய மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள 29 எம்.பி. பதவிகளும் அடுத்த தேர்தலில் பாஜக உறுப்பினர்களுடையதாக இருக்கவேண்டும். நாட்டில் பாஜக உறுப்பினர்கள் இல்லாத பகுதி என்ற பெயரே இருக்கக்கூடாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். நாடு முழுவதும் 330 எம்.பி-க்களும், 1387 எம்.எல்.ஏக்களும் பாஜக-வினராக உள்ளதால் நாம் பலம்வாய்ந்தவர்கள் என அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், இந்த அதிகாரத்தை நாம் விடாமல் வைத்திருப்பதே நமக்கான பலம்’ என பேசியுள்ளார்.
- ச.ப.மதிவாணன்