Skip to main content

மக்கள் சிந்திப்பதால் எங்களால் வளர முடியவில்லை - பாஜக எம்.எல்.ஏ!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

bjp senior leader rajagopal

 

கேரள பாஜகவின் மூத்த தலைவர் ராஜகோபால். கேரள சட்டப்பேரவையில் பாஜகவிற்கு இருக்கும் ஒரே உறுப்பினரான இவர், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சமீபத்தில் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க, பாஜக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இரகசிய கூட்டணி வைத்திருந்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

 

இந்தநிலையில் ராஜகோபால் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கேரளாவில் 90 சதவீத கல்வியறிவு இருப்பதால், அங்கு பாஜக வளரவில்லை எனக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "கேரளா ஒரு வேறுபாடு கொண்ட மாநிலம். இங்கு பாஜக வளராமல் இருப்பதற்கு இரண்டு, மூன்று தனித்துவமான காரணங்கள் உள்ளன. கேரளாவில் 90 சதவீத மக்களுக்குக் கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள், விவாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவை படித்தவர்களின் பண்பு. அது ஒரு பிரச்சினை. இரண்டாவது சிறப்பு என்னவென்றால், மாநிலத்தில் 55 சதவீதம் இந்துக்களும், 45 சதவீதம் சிறுபான்மையினரும் உள்ளனர். எனவே அந்த அம்சம் ஒவ்வொரு தேர்தலிலும் செயல்படுகிறது. அதனால்தான் கேரளாவை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாது. இங்குள்ள நிலைமை வேறு. ஆனால் நாங்கள் சீராக, நிலையாக, மெதுவாக வளர்ந்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்