Skip to main content

சிவசேனா-பாஜக இடையே ஏற்பட்ட புதிய சிக்கல்... அமித்ஷாவின் மும்பை பயணம் திடீர் ரத்து...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மும்பை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

amit shah cancels his trip to mumbai

 

 

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இருகட்சிகளும் சரிசமமான எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனாவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றதால், சட்டசபை தேர்தலில் பாஜக கூடுதலான இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருகட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. மஹாராஷ்ட்ரா மாநில பாஜக தலைமை கூடுதலான இடம் வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது. இந்த நிலையில் அமித்ஷா மும்பை சென்றால் சரிவராது என்பதை கருத்தில் கொண்டு, அமித்ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளூர் பாஜக தலைவர்களும், சிவசேனாவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்