வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜகவை எதிர்க்கும் அனைத்து காட்சிகளையும் ஒன்று திரட்டி ஒரு வலிமையான புது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருகின்றன.
அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் வரப்போகும் மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலிலேயே எதிரிக்கட்சிகளை ஒன்று திரட்ட முனைந்து வருகிறது காங்கிரஸ். மாநிலங்களவை துணை தலைவர் பதவியை கடந்த 2004 -ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தன் கையில் வைத்திருந்து இந்நிலையில் இந்த வருடம் மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜெ.குரியனின் பதவி காலம் விரைவில் முடியவிருக்கிறது.
இனி வரப்போகும் மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் பாஜக அந்த பதவியை கைப்பற்றவும், கங்கிரஸ் உருவாக்கும் கூட்டணியை பிளவுபடுத்தவும் புதிய வியூகமாக கட்சி சார்பில்லாத அதே நேரம் தங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்களை நிறுத்தும் முயற்சிக்கான பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது.
இதன்படி இந்திய குடியரசு தலைவர் நியமிக்கும் எம்பிகளில் நான்கு இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகை மாதுரி தீட்ஜித், மராத்திய எழுத்தாளர் பாலாசாகேப் புரந்தர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. பிரபலங்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கிரிக்கெட் வீரர் கபில்தேவ், மாதுரி தீட்ஜித் ஆகியோரை சந்தித்ததாகவும் அப்போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எம்பி பதவிமட்டுமல்லாமல் அவர்களை 2019 பொதுதேர்தலிலும் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.