மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மக்களவை தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உள்ளூர் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் ஆசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பிரபல போஜ்புரி நடிகரும் பாடகருமான தினேஷ் லால் யாதவை பாஜக களம் இறக்கியுள்ளது.