Skip to main content

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Bengaluru Announcement of holiday for schools and colleges tomorrow
கோப்புப்படம்

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை (29.09.2023) அன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவரின் அறிவிப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌க் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நாளை டெல்லியில்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்