5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடத் தொலைத்தொடர்பு துறைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் ஏலத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 4ஜி-யை விட 10 மடங்கு வேகமாக 5ஜி செயல்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதில் செலவைக் குறைக்கும் 72,097 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம், 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுப்போர், அதற்கான தொகையை 20 தவணைகளாகச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வோடாஃபோன்- ஐடியா, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.