Skip to main content

சிக்கன் ஷவர்மா வரிசையில் பரோட்டா - கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

 Barotta incident- Another shocking incident in Kerala

 

கடந்த வருடம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் சிக்கன் ஷவர்மா தடை செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிக்கன் ஷவர்மா தயாரிக்கப்படும் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில், கேரள மாநிலம் இடுக்கியில் பரோட்டா சாப்பிட்ட 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் நயன் மரியா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து மைதா, கோதுமை உள்ளிட்டவையால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத நிலை இருந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் மைதா உணவுகளை சாப்பிடக் கூடாது என நயன் மரியாவிடம் அறிவுறுத்தியிருந்தனர்.

 

இந்த நிலையில், பரோட்டா சாப்பிட ஆசைப்பட்ட மரியா அங்குள்ள கடை ஒன்றிற்கு சென்று பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும், நயன் மரியா சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மீண்டும் கேரளாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்