
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 10ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். ஜூன் 5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிந்த நிலையில் அதனை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியதில் விதிகளை மீறியதாக ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இதனால் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் முன் ஜாமீன் கோரினார். இந்த வழக்கில் ஜுன் 5ம் தேதி வரை சிதம்பரம் ஆஜராக தடை விதித்தது. அதன்படி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். கைது நடவடிக்கையில் மீண்டும் அவர் முன் ஜாமின்கோரியதை அடுத்து ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜுலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.