Published on 09/08/2019 | Edited on 09/08/2019
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடியான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மேலும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தனியார் மதுக்கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசே மது விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மதுக்கடைகள் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின் மது விநியோகத்திற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.