Skip to main content

என்னது லட்டு விலை இவ்வளவா??

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
laddu

 

ஹைதராபாத்திலுள்ள பாலப்பூர் பகுதியில் நடக்கும் விநாயக சதுர்த்தி நிகழ்ச்சி மிகவும் பிரபலாமனது. எதனால் பிரபலம் என்றால், இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுதான். இந்த லட்டுவை ஏலம் எடுக்க பலரும் போட்டி போடுவார்கள். இந்த முறை ஏலம் இடப்பட்ட இந்த மெகா சைஸ் லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இதை பாலாப்பூரைச் சேர்ந்த ஆர்ய வைசிய சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குப்தா என்பவர் ஏலத்தில் வாங்கியிருக்கிறார். இந்த மெகா சைஸ் லட்டு 16 கிலோ எடையுடையது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவின் குதிரை பேரம்; பறந்த ஜார்க்கண்ட் எம்.எல்ஏக்கள்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
BJP's Horse Bargain; Jharkhand MLAs who flew to Hyderabad

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பள்ளி செல்ல மங்கள வாத்தியம்... மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Mangala instrument to go to school ... Former MLA who shocked his daughter!

 

கரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாகப் பள்ளிக்கு செல்லும் மகளை முன்னாள் எம்.எல்.ஏ மங்கள வாத்தியத்துடன் அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ விஷ்ணுவர்தன் ரெட்டி. இவரது மகள் ஜனஸ்ரீ ரெட்டி எட்டாம் வகுப்பு படித்துவரும் நிலையில் கரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்தே பள்ளி வகுப்புகளை ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்நிலையில் இரண்டு ஆண்டு கரோனா தாக்கத்திற்குப் பிறகு பள்ளி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தந்தை விஷ்ணுவர்தன் ரெட்டி மங்கள வாத்தியம் முழங்க மகளை காரில் ஏற்றி பள்ளிவரை வாத்தியத்தோடு கொண்டு சென்று பள்ளியில் விட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மகளுக்கு பள்ளி சென்றுவர கார் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ.