அரசு ஊழியர்கள், தங்கள் பெற்றோர் அல்லது மாமனார் - மாமியாரோடு நேரத்தை செலவிடுவதற்காக அசாம் அரசு சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது. ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை இந்த சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 ஆம் தேதி ஞாயிற்று கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ. ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த சிறப்பு விடுமுறையை எடுக்கலாம் என பீகார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த விடுமுறை எடுப்பவர்கள், பணிக்கு திரும்புகையில், பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாரோடு நேரம் செலவழித்ததற்கான புகைப்பட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். "பண்டைய இந்தியாவின் மதிப்புகளை நிலைநிறுத்த" இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தாண்டு முதல், தங்களது பெற்றோர்களை புனித யாத்திரைக்கோ, சுற்றுலா தளங்களுக்கோ அழைத்து செல்ல, கீழ்நிலை ஊழியர்களுக்கு பொருளாதார உதவி வழங்கவும் முயற்சிப்போம் என பீகார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.