Published on 16/10/2019 | Edited on 16/10/2019
கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் 400- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தின. அதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றன.
இந்த சோதனையில் தமிழகத்திலும், ஆப்பிரிக்காவிலும் அதிகளவில் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் சொத்துகள் வாங்கியதையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளன. இதில் வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது.