மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் மதிப்பெண் பட்டியல் என்று குறிப்பிட்ட புகைப்படம் ஒன்றை பாஜக வின் சுப்பிரமணியன் ஸ்வாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியின் பெயர் ராவுல் வின்சி எனவும், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படித்ததாகவும் அந்த சான்றிதழ் குறிப்பிடுகிறது. மேலும் அதில் பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கையில் அவர் ஃபெயில் ஆனதாகவும் அதில் உள்ள தகவலை மேற்கொண்டு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த சான்றிதழ் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமா பரவி வரும் நிலையில், நேற்று ஸ்ம்ரிதி இரானியின் கல்வி தகுதியை காங்கிரஸ் கேலி செய்ததால் அதற்கு பழி வாங்கவே போலி சான்றிதழை ஸ்வாமி வெளியிட்டுள்ளார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.