Skip to main content

மூன்று தலைநகர் மசோதாவை திரும்பப்பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

jeganmohan reddy

 

2014 ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது 10 வருடங்களுக்கு ஆந்திராவிற்கும் தெலங்கானாவிற்கும் ஹைதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, அமராவதியைத் தலைநகரமாக மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக விவசாயிகளிடமிருந்தும் நிலங்களைக் கையகப்படுத்தியது.

 

இந்தநிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்ற ஆந்திரப்பிரதேச பரவலாக்கம் மாற்றும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மசோதாவையும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

 

ஆனால், மூன்று தலைநகர் அமைக்கும் அரசின் முடிவுக்கு ஆந்திர எதிர்க்கட்சிகளும், அமராவதியில் தலைநகரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மூன்று தலைநகர் அமைக்கும் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது விசாரணையிலும் உள்ளது.

 

இந்த நிலையில் மூன்று தலைநகர் அமைக்கும் சட்டத்தை ஜெகன்மோகன் அரசு திரும்பப்பெற நடவடிக்கை எடுத்துள்ளது. மூன்று தலைநகர் அமைக்க வழி செய்யும் மசோதாவைத் திரும்பப்பெறும் வகையில், புதிய மசோதா ஒன்றை ஜெகன்மோகன் அரசு இன்று நிறைவேற்றியுள்ளது. அப்போது பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "ஆந்திராவில் மூலதனப் பரவலாக்கம் மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை அரசு திரும்பப்பெறுகிறது. பிழைகள் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்