மக்களவை விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசிய போது, "காந்தியை கொலை செய்த கோட்சே 32 ஆண்டுகளாக காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன்பிறகு தான் காந்தியைதிட்டமிட்டு கொலை செய்தேன். ஏனென்றால் காந்தி ஒரு சார்புக் கொள்கையுடவர் என நினைத்தேன் எனக் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், ''இந்த விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக் கூடாது'' என எதிர்ப்பு தெரிவித்தார். பிரக்யா சிங் தாகூர் கோட்சேவை தேசபக்தர் என்று மீண்டும் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடுமையான விமர்சனத்துக்குள்ளான பிரக்யா, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கோட்சேவை தேச பக்தர் என கூறியது தொடர்பாக மக்களவையில் பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.