நேற்று மாலை ஐந்து மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பல இந்து அமைப்புகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு நடந்தாலும் சில பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர். வந்தவர்களை எல்லாம் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். பக்தர்கள் இன்றி அங்கு நடப்பதை செய்தி சேகரிப்பு செய்ய வந்த பெண் பத்திரிகையாளர்களையும் தடுத்தனர். ஒரு கட்டத்தில் அங்கு வரும் பெண்களை போராட்டக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். நேற்று மாலதி என்ற ஐயப்ப பக்தர், போராட்டக்காரர்களின் தாக்குதலால் சாமி தரிசனம் செய்யமுடியாமல் பாதிலேயே திரும்பினார். இதனையடுத்து இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டுவர போலிஸார்கள் தடியடி நடத்தினர். பின்னர், அந்த இடமே வன்முறை களமாக மாறியது.
இந்நிலையில், இன்றும் சபரிமலையில் இந்து அமைப்புகளும் அவர்களுடன் பாஜக இளைஞரணி சேர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீண்டும் காவல்துறை அவர்களை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறை குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிக்கிறது. மேலும், போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பின்புலமாக கொண்டவர்கள்தான் இந்த வன்முறைக்கெல்லாம் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.