இந்தியாவின் சிறுபான்மை மக்களை பிரித்தாளும் மோடியின் நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு கொடூரமானது. கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிதியை குறைத்திருக்கிறார்கள். குறிப்பாக கல்வித்துறையில் இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் மத்திய அரசின் குறுக்கீடுகள் அதிகரித்துள்ளன.
2014 தேர்தலிலேயே குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி இந்தியாவின் பிரதமராக தகுதி இல்லாதவர் என்று நான் சொன்னேன். ஒரு இந்தியனாக மோடியை எனது பிரதமராக விரும்பவில்லை. சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அவர் குஜராத்திலேயே எதுவும் செய்யவில்லை என்பதால் அப்படி முடிவெடுத்தேன்.
இன்றும் எனது கருத்தை அவர் தொடர்ந்து நிரூபிக்கிறார். நாட்டின் மதசார்பின்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இப்போதும் மோடி இருக்கிறார் என்று அமார்த்தியா சென் கூறியிருக்கிறார்.