இன்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார். இராமநாதபுரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார், மோடியை மீண்டும் பிரதமராக்கும் போரில் தமிழகத்திலிருந்து 35 எம்.பி.க்கள் பங்கேற்பார்கள். மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை எள்ளளவு கூட அனுமதிக்காது. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது. பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது, நிச்சயம் பதிலடி கொடுப்போம். 2019ம் ஆண்டு தேர்தலுக்கான யுத்தத்தில் பங்கேற்க இந்த மாநாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். மேலும் அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிபெற்று மோடியை பிரதமராக்கினால் தமிழகம் முதன்மை மாநிலமாக அமையும்.
12இலட்சம் கோடிக்கு உழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? மிகப்பெரிய ஊழல் செய்யக்கூடியவர்கள் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் நல்லது செய்ய முடியுமா? 5 தொகுதிகள் அல்ல, 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற முழு சக்தியோடு உழைக்க வேண்டும். திமுக காங்கிரசை தோற்கடிக்க 40 தொகுதிகளிலும் முழு சக்தியோடு பணியாற்ற வேண்டும்.