அமேசான் நிறுவனம் தனது சேவையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதுவரை அமேசானில் ஸ்மார்ட் ஃபோன்களை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வதற்கு ஒரு வாரம் ஆகும். இதுவே அமேசான் ப்ரைம் மூலமாக ஆர்டர் செய்தால் ஒரு நாளில் வரும். ஆனால் இனி ஸ்மார்ட் ஃபோன்களை ஆர்டர் செய்தால், ஆர்டர் செய்ததிலிருந்து 3 முதல் 5 மணி நேரத்தினுள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதற்கு ’ஃபாஸ்டர் தேன் சேம் டேய்’ (Faster Than Same Day) எனும் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ப்ரைம் மூலம் ஆர்டர் செய்யும் நபர்களாக இருந்தால் இலவசமாகவும், ப்ரைமில் இல்லாதவர்களுக்கு ரூ.150 கட்டனத்துடனும் இந்த சேவையை அமேசான் நிறுவனம் வழங்கிவருகிறது. முதல் கட்டமாக இப்போது டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டும் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. அடுத்ததாக இந்த சேவையை மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.