கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சரக்கு போயிங் 777-300 இஆர் ரக விமானம் ஆம்ஸ்டர்டாம் எனும் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குத்தகை தொகை நிலுவை காரணமாக இந்த விமானத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த சரக்கு சேவை நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி விலகிய நிலையில் இதன் கட்டுப்பாட்டை கடன் வழங்கிய எஸ்பிஐ நிர்வாகம் நிர்வகித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே குத்தகை நிலுவை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நான்கில் மூன்று பங்கு விமானங்கள் முடக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் உள்ள மொத்த 123 விமானங்களில் தற்போது 25 விமானங்கள் மட்டுமே குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுவருகின்றது. இந்நிலையில் சரக்கு சேவை பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானமும் தரையிறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.