ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். கடல் மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 880 மீட்டர் உயரத்தில் தோன்றும் இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பாகல்காம் மற்றும் பல்தல் ஆகிய மலைப்பாதைகள் வழியாக குகைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். 2019- ஆம் ஆண்டிற்கான புனித யாத்திரை கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கியது. அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் முதல் குழுவை காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் கே.கே.சர்மா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். முதல் குழுவில் 2,200 பேர் சென்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஆபத்தான பாலத்தை அமர்நாத் யாத்ரீகர்கள் கடக்க இந்தோ-திபெத்திய எல்லை காவலர்கள் உதவி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்லால் என்ற இடத்தில் அருவியைக் கடந்து மலைப்பாதையில் பயணிக்க தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மரத்தால் ஆன இந்த பாலத்தை ஒட்டி அருவி ஆர்ப்பரிப்பதால் அவ்வழியே அமர்நாத் செல்லும் யாத்ரீகர்கள் பாதுகாப்போடு கடக்க இந்தோ - திபெத்திய எல்லை காவலர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று உதவி வருகின்றனர். இதனால் தடையோ, தயக்கமோ இன்றி யாத்ரீகர்கள் தங்கள் யாத்திரையைத் தொடருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#WATCH Indo-Tibetan Border Police (ITBP) personnel help pilgrims cross a bridge in Baltal, Jammu & Kashmir. #AmarnathYatra pic.twitter.com/2QmFt3RahY
— ANI (@ANI) July 6, 2019