
போராட்டத்தில் உள்ள எம்.பி க்களுக்கு தேநீர் வழங்கிய ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மசோதா தொடர்பான விவாதத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற மறுத்து காந்தி சிலை முன் இவர்கள் தர்ணா போராட்டத்தை தொடருகின்றனர். இரண்டாவது நாளாக தர்ணா செய்யும் இந்த எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை தேநீர் கொண்டுவந்தார்.
ஆனால், அவர் கொடுத்த தேநீரை எம்.பி.க்கள் வாங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் உள்ள எம்.பி க்களுக்கு தேநீர் வழங்கிய ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமரின் பதிவில், "தன்னை அவமதித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேரில் சென்று தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களோடு நானும் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.