Skip to main content

சிக்கிய போதைப்பொருள் - அதானி துறைமுகம் எடுத்த முக்கிய முடிவு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

l

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானிக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் வந்ததையடுத்து துறைமுகத்திற்கு வந்த அனைத்து கண்டெய்னர்களையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இதில் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 21 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்ததில் இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் தற்போது வரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு ஈரான், ஆப்கான், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களைக் கையாளுவதில்லை என்று அதானி துறைமுக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்