Skip to main content

அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இரத்து!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

amarnath yatra

 

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் பனிலிங்கம் உருவாகும். ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரையாக வந்து, இந்த பனி லிங்கத்தை தரிசிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த அமர்நாத் யாத்திரை இரத்து செய்யப்பட்டது.

 

இந்தநிலையில், இந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அடையாள யாத்திரை நடத்தப்படும் எனவும், பனி லிங்கத்திற்கு எப்போதும் போல பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்கும் விதமாக, நடைபெறும் பூஜைகள் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்