Skip to main content

மீண்டும் இறங்கி வந்த ஏர்டெல்... ஜியோ எஃபெக்ட்...?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

 

ar

 

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ அறிமுகமானதிலிருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் விலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் முதலில் ஏர்டெல் நிறுவனம் ரூ.196-ல் சர்வதேச ரோமிங் கால் சலுகையை அறிமுகம் செய்தது அதன் பின் ரூ.35, ரூ. 65 மற்றும் ரூ. 95 என்று மூன்று ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக ரூ.181-க்கு புதிதாக ஒரு ப்ரீ பேய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் எப்போதும்போல் அன்லிமிடெட் கால் வசதியையும் அதனோடு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவையும் இணைத்துத்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதன் வேலிடிட்டி 14 நாட்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 199-க்கு, ஒரு நாளைக்கு 1 ஜிபி என்ற வீதம் 28 நாட்களுக்கு வழங்கிவந்தது குறிப்பிடத்தக்கது 

சார்ந்த செய்திகள்