கடந்த 2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற மேற்குவங்க ஐபிஎஸ் அதிகாரியான கவுரவ் சந்திரா தத் என்பவர் கடந்த 19 ஆம் தேதி தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி, அதனை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பினார்.
அதில், 'எனது தற்கொலைக்கு மம்தா பானர்ஜி அரசு தான் காரணம் என்றும், 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளாக என் மீதான விசாரணையை முடிக்காமல் இழுத்தடித்து அவரது அரசாங்கம். இதனால் நான் நிறைய சிக்கல்களை சந்தித்தேன். எனவே என் வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்த மம்தா அரசை விசாரிக்க வேண்டும்' என அவர் மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கடிதத்தை கொண்டு எதிர்க்கட்சிகள் தற்போது மம்தாவை குற்றம் சாட்டி வருகின்றன. இறந்த ஐபிஎஸ் அதிகாரியான கவுரவ் சந்திரா, கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்த இரு கான்ஸ்டபிள்களின் மனைவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பதவியில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.