Published on 12/03/2020 | Edited on 12/03/2020
டிசம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றினால் 1,09,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3800 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆக இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதிசெய்தார். இதையடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கேரளாவில் 16 ஆக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 74ஆக உயர்ந்துள்ளது.