சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கரோனாவிற்கு சிகிச்சைபெற்று வந்த சசிகலா பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அவரை பின்தொடர்ந்து அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆகியோர் காரில் சென்றனர். தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெளியே வந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அவர் எபால் பகுதியில் உள்ள பண்ணைவீட்டில் தங்கி 10 நாட்கள் ஓய்வெடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.