
உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலுள்ள பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக குஜராத் துணை முதல்வர் கூறியுள்ளார். அதேபோல ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யா நகர் என மாற்றவேண்டும் என்று பாஜக எம் எல் ஏ ஒருவர் பேசியிருக்கிறார்.
இந்நிலையில், மேலும் பல ஊர்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உபியில் உள்ள முசாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்ற வேண்டும் என பாஜக எம் எல் ஏ சஞ்சீத் சோம் வலியுறுத்தியுள்ளார். இதுபோல தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகரின் பெயரை அகரவால் அல்லது அகரவன் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.