இந்தியாவின் பிரதம மந்திரியாக பாஜக தலைமையிலான நரேந்திர மோடியின் நான்கு வருட ஆட்சி முழுவதாக முடிந்து தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் அண்மையில் ஆன்லைன் கருத்து கணிப்பு ஒன்றை டைம்ஸ் குரூப் நடத்தியது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்த பிரதமர் யார்? நரேந்திர மோடி, ராகுல் காந்தி, இவர் இருவர்களை தவிர வேறு ஒருவர். என்ற கேள்வி வைக்கப்பட்டது.
டைம்ஸ் குழுமத்தை சார்ந்த 9 மீடியா நிறுவனங்கள் 9 மொழிகளில் நாடு முழுவதும் மே 23-25 நடத்திய இந்த கருத்து கணிப்பில் மோடி மற்றும் ராகுல் காந்தி அல்லாத ஒருவரே பிரதமர் ஆவார் என 16.12% பேர் வாக்களித்துள்ளர். ராகுல் காந்திக்கு 11.93% வாக்களித்துள்ளனர். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக என 71.95% கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மோடியின் ஆட்சியின் திறமைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்து கணிப்பில் மிக நல்லது, நல்லது, சராசரி, மோசம் என்ற நான்கு கருத்துக்களுக்கு எந்த கருத்து உங்களுடையது என கேக்கப்பட்ட கேள்விக்கு மிக அருமை என 47.47 சதவிகிதத்தினரும். நல்லது என 20.6 சதவிகிதத்தினரும். சராசரியானது என 11.38 % பேரும், மோசம் என 20.55 % பேரும் கருத்தளித்துள்ளனர்.
ஒரு பக்கம் நாடு முழுவதும் பாஜக ஆட்சி நடந்துவரும் நேரத்தில் கர்நாடகத்திலும் பாஜக அண்மையில் காலூன்ற நினைத்து பலிக்காமல் போனது. அப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் உண்மையில் மக்கள் குரலா அல்லது டிஜிட்டல் இந்தியா என பேசிய வரும் மோடிக்கு டிஜிட்டல் உலகம் கொடுத்த ஆதரவா என்ற உண்மையை தேர்தல் முடிவுகள்தான் விளக்கும்.