Skip to main content

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள், குழந்தைகள் படங்களை வெளியிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
rr


பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்று வந்தது. முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பான அந்த வழக்கில், பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது. 
 

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு இன்று விசாரித்தது.
 

வழக்கு விசாரணையை அடுத்து, பாட்னா ஐகோர்ட் விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

nn

 

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்பிருந்த திமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணையானது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையானது நடந்து வந்த நிலையில் இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் முகாந்திரம் இல்லை என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

 

Next Story

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியீடு

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

Publication  Supreme Court judgments state languages including Tamil

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது.

 

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்., உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்தது. 

 

இந்நிலையில், குடியரசுத் தினவிழாவை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது. அதில் 52 வழக்கின் தீர்ப்புகள் தமிழிலும், 29 வழக்கின் தீர்ப்புகள் மலையாளத்திலும், 28 வழக்கின் தீர்ப்புகள் தெலுங்கிலும், 21 வழக்கின் தீர்ப்புகள் ஒடியா மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.