Skip to main content

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து...

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

advani about babri masjid case verdict

 

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். 

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர். 

 

இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு காலத்தில் காணொளிகாட்சி மூலமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அத்வானி, "பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு எனது தனிப்பட்ட மற்றும் பாஜகவின் நம்பிக்கையையும், ராம் ஜென்மபூமி இயக்கத்தின் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்