சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி57ல் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது.
இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், “புவி சுற்று வட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. சரியாக 648 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா விண்கலம் தனியாகப் பிரிந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் சரியான சுற்று வட்டப் பாதையில் செல்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூரப் பயணத்திற்குப் பின் எல்-1 புள்ளியை அடையும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘சந்திரயான், ஆதித்யா வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
ஆதித்யா விண்கலத்தின் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, “ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.