புல்வாமா தாக்குதலுக்கான பதிலடி தாக்குதலில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி திரும்பியது. அதன் பின் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயன்ற போது, காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை அபிநந்தன் இடைமறித்துள்ளார். அப்போது, இடைமறித்த அந்த விமானத்தை தனது மிக் 21 ரக விமானத்தில் இருந்து ஆர் 73 என்ற ஏவுகணையை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளார்.
அப்போது எப் 16 நடத்திய பதில் தாக்குதலிலேயே இவரது விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானில் குதித்த பின்னர் 2 நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில் மிக் 21 விமானத்திலிருந்து அவர் குதிப்பதற்கு முன் கடைசியா அவரிடமிருந்து வந்த ரேடியோ சிக்னல் என்ன என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை தாக்க ஆர் 73 ஏவுகணையை செலுத்த அவர் தயாரானபோது "ஆர்73 செலக்ட்டட்" என கூறியுள்ளார். இதுவே மிக் 21 விமானத்திலிருந்து அபிநந்தன் அனுப்பிய கடைசி தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.