![Expired 'grill chicken'-22 hospitalized](http://image.nakkheeran.in/cdn/farfuture/2kk-0uDmTTNMLp1vGTvQticYeKmE34u8yp-Zt4rOgCM/1738759790/sites/default/files/inline-images/a2451.jpg)
மதுரையில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை எடுத்துள்ள தென்கரை பாலம் அருகே தனியார் உணவகத்தில் கிரில் மற்றும் தந்தூரி சிக்கன் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதனை பலரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் காவல்துறையினர் பாதுகாப்போடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் சம்பந்தப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்தது தெரிய வந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வைத்த அந்த கடை நிர்வாகத்திற்கு நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.