Published on 27/08/2021 | Edited on 27/08/2021

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது வரை குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா " நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த 50 சதவீத பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.