கடந்த செவ்வாய்கிழமை அன்று விமானத்தில் பயணம் செய்யும் போது நான்குமாத குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹைதிராபாத் விமான நிலையத்தில் உயிரிழந்தது. பெங்களூரில் இருந்து எடுக்கப்பட்ட விமானம் குறைந்த நேரத்திலேயே ஹைதிராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது. குழந்தைக்கு மருத்துவ உதவி செய்யவேண்டும் என்பதற்காக பெங்களூரில் இருந்து பாட்னா செல்லவேண்டிய விமானம், ஹைதிராபாத்துக்கு திருப்பப்பட்டது.
பெற்றோருடன் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பச்சிளம் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, விமான குழு ஹைதிராபாத்துக்கு திரும்புவதாக தீர்மானம் செய்தது. ஹைதிராபாத் விமான நிலையத்தில் மருத்துவரையும், ஆம்புலன்ஸையும் காலை 7:30 மணியளவில் இருக்குமாறு தகவல் சொல்லப்பட்டது. விமானம் விமான நிலையத்தில் இறங்கியவுடன், குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர், குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் செக்ஷன் 174 கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.