இரண்டு மைனர் சிறுமிகளுக்கு 2 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது கோபிந்தபூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகளை, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அதே பகுதியில் செக்யூரிட்டியாக பணிபுரிபவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து, சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணையில் குற்றவாளிகள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களின் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு போக்ஸோ எனும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது மத்திய அமைச்சரவை. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் தூக்கு தண்டனை மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியில் தொல்லை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. சட்டம் கடுமையாக்கப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.