Published on 02/05/2021 | Edited on 02/05/2021
இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒடிசா மாநிலத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்று (01.05.2021) ஒரேநாளில் 8 ஆயிரத்து 15 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.