Skip to main content

''நாங்கள் ஐயப்பனின் குழந்தைகள்'';சபரிமலைக்கு செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம்!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018

 

11 womens stoped  who tried to go to Sabarimala

 

சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற 11 பெண்களை அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். சென்னையிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 11 பெண்கள் செல்ல முயன்றனர். பம்பை விநாயகர் கோவில் பெண்களுக்கு இருமுடி கட்ட அங்கிருந்த அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்ததால்  பெண்களே தாங்களாகவே  இருமுடி கட்டிக் கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

 

பயணம் செய்த 11 பேரில் 9 பேர் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கூடாது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி  பெண்கள் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்த 11 பெண்களும் ஏற்கனவே பாதுகாப்பு கோரி கேரள முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. தாங்கள் ஐயப்பனின் தங்கைகள், குழந்தைகள் எங்களை அனுமதியுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

 

அன்மையில் சபரிமலைக்கு  திருநங்கைகள் சென்றது கூட பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் செல்ல முயன்றதால் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்