புளூவேல் விளையாட்டால் +1 மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது.
தற்போது இந்த விளையாட்டால் மத்திய பிரதேசம் மாநிலம், தமோஹா நகரை சேர்ந்த +1 படிக்கும் மாணவன் சாத்விக் பாண்டே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தியதில் சாத்விக் பாண்டே எப்போதும் புளூவேல் விளையாடி கொண்டு இருந்ததாக அவரது நண்பர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.