Published on 09/10/2018 | Edited on 10/10/2018
![ss](http://image.nakkheeran.in/cdn/farfuture/i-9LoFbyxaDHDnjVrntPZBKR2kt1OyBmhKVP3ionSDw/1539096622/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-10-09%20at%202.32.40%20PM%20%282%29.jpeg)
நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய கோரியும் விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்தனர்.
நக்கீரன் ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில், விருத்தாசலம் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கைது நடவடிக்கைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியல் செய்த 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.