தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி தீ விபத்து குறித்து கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,
குரங்கணி தீ விபத்து இனி ஒரு பாடமாக கருத வேண்டும். உரிய பாதுகாப்புடன் மலையேற்ற பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அங்கு செல்வது சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையூறாக இருக்கும்.
மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்ட அரசுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து நேரங்களிலும் அரசை விமர்சிப்பது சரியானது அல்ல. வனப்பகுதிகளில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை ஊடகங்கள் விரிவாக வெளியிட வேண்டும். வனப்பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு கூறியுள்ளார்.