
சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை வீடு திரும்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.