கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று சென்னை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.
இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.