சமூக வலைதளமான வாட்ஸ் - அப்பின் தலைமை செயல் அதிகாரி ஜான் கௌம் (Jan Koum) தனது பதவியை திடீர் என ராஜினாமா செய்தார்.
உக்ரைனைச்சேர்ந்தவர் ஜான் கௌம். ஒரு சமூக சேவை திட்டத்தில், கிடைத்த வீட்டில் குடியேறுவதற்காக தாய் மற்றும் பாட்டியுடன் கலிபோர்னியா சென்றார். அங்கு ஒரு மளிகை கடையில், உதவியாளராக வேலை பார்த்தார். ப்ரோக்ராம்மிங்கில் ஆர்வம் கொண்டு, சான் உசே மாநில பல்கலைகழகத்தில் சேர்ந்தார். 1997 -ல் யாஹூவில் உள்கட்டமைப்பு இன்ஜினியராக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 2007 வரையில், ஏழு வருடமாக யாஹூவில் பணிபுரிந்தார். ஃபேஸ்புக்கில் சேர விண்ணப்பித்து நிராக்கரிக்கப்பட்டார். 2009ல் அலெக்ஸ் ஃபிஷ்மன் என்பவருடன் இணைந்து வாட்ஸ் அப் செயலியை உருவாக்கினார். இதன் பின்னர், ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், ஜான்னை சந்தித்து, ஃபேஸ்புக் உடன் சேர்ந்து கொள்ளுமாறு, டீல் பேசிக்கொண்டார். 2014 -ல் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிக் கொண்டது.
இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ஜான் கௌம் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடிய செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் ஜான் கௌமுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்த நிலையில் வாட்ஸ் அப் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக ஜான் கௌம் அறிவித்துள்ளார்.