
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன்காந்தியை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதியம் 12.15 மணியிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இப்போதுவரை திருமுருகன்காந்தியை 2.30 மணிவரை சந்திக்க முடியவில்லை. தற்போதுதான் திருமுருகன் காந்தியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து மே 17 இயக்கத்தினர் கூறியது, இங்கு அனைவரும் காத்திருப்பதால் போருர் பாலம் அருகிலேயே திருமுருகன் காந்தியை அழைத்து வந்த வாகனம் நிறுத்தப்பட்டது. காவலர்களின் பாதுகாப்பில் அவர் அங்கேயே காத்திருக்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு சிறையில் உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கவேண்டும் எனக்கூறியும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர்தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.