இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நான்கு நாள் ஒய்வு எடுப்பதற்காகவும் சித்த வைத்திய சிகிச்சைக்காகவும் நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சிக்கு இன்று காலை வந்தார். பின்னர் அவர் அருகில் உள்ள குற்றாலம் நிகழ்ச்சிக்காக சென்றார்.
இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாக தெரியவில்லை, ஆனால் சீனாவுடனான நெருக்கத்தை இலங்கை அரசு வெளிப்படையாக காட்டுகிறது என நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ’’இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை. இதனால் ஆட்சியில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகிறது. 2020 வரை ஆட்சியை கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயன்று வருகின்றனர். தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது விளை நிலங்கள் அரசே அபகரித்து சிங்களர்களுக்கு வழங்குகிறது. இதனால் தமிழ் மக்கள் வீ்டுகளை, விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது, அவர்களுக்கு அதனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறிபோகிறது, தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்க செய்கின்றனர். இவை அனைத்தையும் சரி செய்ய மாகாணங்களிற்கான அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. 1987 ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறிபோய்விட்டது. அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை, வடக்கு மாகாண பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் ராணுவ வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது, விளைநிலங்கள், கட்டிடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அரசுக்கும், இந்தியாவுக்குமான உறவு நெருக்கமானதாக தெரியவில்லை. ஆனால் இலங்கை அரசு சீனாவுடன் வெளிப்படையாக அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடு அகதிகளாக உள்ளவர்கள் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை மாநில சுயாட்சி வேண்டும் ஒரே இலங்கை என்பதே கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
குற்றாலம் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குற்றாலம் பவ்டா நிறுவனத்தில் சித்திரை திருநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நூல் வெளீட்டு நிகழ்ச்சியும், தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு இலங்கை வடக்கு மாகாணம் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமை வகித்தார்.இந்திய அரசு சித்தா தேசிய நிறுவனத்தின் சென்னை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வி.பானுமதி நூலை வெளியிட பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் நீலாவதி பெற்றுக்கொண்டார்.
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் - திரு.விக்னேஷ்வரன் நெல்லை மாவட்டத்தில் பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள பவ்டா ஹோட்டலில் சித்தா டாக்டர் - சினிவாசன் தலைமையில் -வீரசிம்ம அவலோகணம் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
மன அமைதிக்காக வந்த விக்னேஷ்வரன் நெல்லை மாவட்ட ஆலயங்களில் தரிசனம் செய்யவும் உள்ளார்.
-பரமசிவன்