Skip to main content

“இது கருத்துக்கணிப்பு அல்ல, மோடியின் கணிப்பே” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Rahul Gandhi criticized sIt's not a poll, it's Modi's prediction

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 

இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் தற்போது வெளியிட்டது. அதில் ரிபப்ளிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 30 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா பொருத்தவரை இந்தியா நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் பிமார்க் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. 

இதே போன்று, சில முக்கிய செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இது கருத்துக்கணிப்பு இல்லை, மோடி ஊடகத்தின் கணிப்பு. இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்